வெள்ளி, 19 ஜூன், 2009

நான் கடவுள்

எதை எப்படி ஏத்துக்கனும்னு நெறைய பேருக்கு தெரியல / சொல்லி கொடுக்கல


கண்ணுக்கு தெரியுற எல்லாத்தையும் புரிஞ்சிக்கணும்னு ஆசைபட்டா நம்ம வாழ்நாள் போதாது. பல விஷயங்களை அப்படியே ஏத்துக்கணும். சில விஷயங்களை ஆராய்ச்சி பண்ணி அப்புறம் ஏத்துக்கணும்.


எதை எப்படி ஏத்துக்கனும்னு நெறைய பேருக்கு தெரியல / சொல்லி கொடுக்கல


எந்த விஷயம் காலம் செல்ல செல்ல மாறுமோ, இல்ல, உன்கிட்ட வரும்போது மாறுமோ, அதை ஆராய்ச்சி பண்ணி அப்புறம் ஏத்துக்கணும். எந்த விஷயம் மாறாதோ இல்ல நீ மாற கூடாதுன்னு நெனகிறியோ அதை அப்படியே ஏத்துக்கணும்.

சில விஷயங்கள் நடக்கறத பாத்து நமக்கு நம்பிக்கை வரும். இது இயற்கையா நடக்கறது. மொதல்ல இது உண்மையா இருந்தாலும், போகப்போக பொய்யா, இல்ல உண்மையின் வேறு பரிமாணமா மாற வாய்ப்பு இருக்கு.

சில விஷயங்கல நம்பினா அது நாம நம்பின மாதிரியே நடக்கும். இது உளவியல் ரீதியா நடக்கறது. மொதல்ல இது பொய்யா கூட இருக்கலாம். ஆனா கட்டாயம் உண்மையா மாறும்.

அதனால, எத நம்பனும், எத நம்பிக்கையால மாத்தணும்னு தெரிஞ்சுகிட்டா, நாம நெனைக்கிற எல்லா விஷயமும், நாம நெனைக்கிற மாதிரியே நடக்கும்.

தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு. "நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்."

தெய்வம் என்ன நினைக்கும்னு நாம தெரிஞ்சுகிட்டா, நம்மளவிட அதிஷ்டசாலி, யாரும் இருக்க முடியாது.

ஆனா, தெய்வத்த புரிஞ்சுக்க, என்ன செய்றது?

§ மொதல்ல நாம யாருன்னு நாம தெரிஞ்சுக்கணும்

o சின்ன வயசிலேர்ந்து எப்படி வளர்ந்தோம், யாரு சோறு ஊட்டினா, யார் குளிபாட்னா, யாரு எத சொல்லி குடுத்தா, எல்லாத்தையும் மனசுக்குள்ள அசை போடணும்.

o தனிமையா ஒக்காந்து யோசிக்கணும்.

o நம்மோட ஆசைகள் என்ன, பழக்க வழக்கம் என்ன, புடிச்ச விஷயம் என்ன, அது ஏன் புடிக்குது, புடிக்காத விஷயம் என்ன, ஏன் புடிக்கல, எல்லாமே தெரிஞ்சுக்கணும்.

o இந்த உலகத்துல நமக்கு என்னென்ன கெடச்சிருக்கு, எல்லாருக்கும் அது கெடச்சிருக்கா? நமக்கு என்ன கெடைக்கல? ஏன் கெடைக்கல? மத்தவங்களுக்கு அது கெடச்சிருக்கா? இந்த எல்லா கேள்விக்கும் பதில் தெரிஞ்சுக்கணும்.

o நம்ம சமுதாயத்துல ஆண் எப்படி, பெண் எப்படி, அப்பா எப்படி அண்ணன் எப்படி, தங்கச்சி எப்படி, சித்தப்பா எப்படி, மாமா எப்படி...எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும்.

§ நிதானம் ரொம்ப முக்கியம் - உணர்ச்சி வசப்படாம எந்த ஒரு விஷயத்தையும் பார்த்தா, அதோட உண்மையான உருவத்த பாக்க முடியும். உண்மையான உருவத்த பாக்கும்போது அந்த விஷயத்த பத்தின புரிதல் நல்லா இருக்கும். உனக்குன்னு ஒரு கற்பனையோ இல்ல, ஏற்கெனவே நடந்த மாதிரிதான் நடக்குங்கிற நெனைப்போ இருக்கவே கூடாது.

§ யார் எத சொன்னாலும், கூர்மையா கவனிக்கணும் - நாம யாருன்னு நமக்கு தெரியுற மாதிரி, நம்ம கூட இருக்குற எல்லாரையும் தெரிஞ்சுக்கணும். மத்தவங்க பேசும்போது, வெறும் வாயளவுல பேசுறாங்களா இல்ல மனசுலேர்ந்து பேசுறாங்களான்னு மொதல்ல தெரிஞ்சுக்கணும். அப்புறம், அவுங்க சொல்ற விஷயம் நடக்க கூடியதா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும். இப்படி கூர்மையா எல்லாத்தையும் நாம கவனிக்கறப்ப நம்ம மனசு ஒரு தெளிவுக்கு வரும். மனசு தெளிவா இருந்தா எல்லாமே சாத்தியம்தான்.

§ யாராவது நம்மகிட்ட கேள்வி கேட்டா, ஒரு நிமிஷம் யோசிச்சு பதில் சொல்லணும்

o ஒருத்தர் கேள்வி கேட்டா, மொதல்ல நாம பதில் சொல்லனுமான்னு யோசிக்கணும்.

o மூணாவது மனுஷன் கேள்வி கேட்டா, இவனுக்கு பதில் நாம ஏன் சொல்லனும்னு யோசிச்சு பாக்கணும். பதில் சொல்லலாம்னு தோனுச்சுனா சொல்லலாம். இல்லனா நாம நம்ம வேலைய பாக்கலாம்.

o சொந்தகாரங்க, நமக்கு நெருக்கமானவங்க கேட்டா, எந்த மூட்-ல அவுங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு பதில் சொல்லணும். சில நேரம், கோவத்துல கேள்வி கேக்கும்போது பதில் சொல்றத விட அந்த பதில செயல்ல செய்யறது நல்லது. பதில் சொல்லித்தான் ஆகனும்னா, நிதானமா யோசிச்சு பதில் சொல்லணும். நாம தப்பு செஞ்சிருந்தா உடனே மன்னிப்பு கேக்கணும். நெருக்கமானவங்க கிட்ட மன்னிப்பு கேட்டா எந்த தப்பும் இல்ல. அத பத்தி பெருசா feel பண்ணவும் தேவையில்ல.

§ மனச எப்பவும் ரிலாக்சா வெச்சுக்கணும் - அதிக உலக அறிவும், மத்தவங்கள பத்தின புரிதலும், இருந்தா நாம கோவப்படவே மாட்டோம். கோவப்படாம இருந்தா மனசு எப்பவும் ரிலாக்சாதான் இருக்கும்.

மேல இருக்குற எல்லா கேள்விக்கும் பதில் உனக்கு திருப்தியா இருந்தா எத பத்தியும் கவலை படாம எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம உன் மனசு சொல்ற மாதிரி நீ எப்பவும் நடந்துக்கலாம்.

இதெல்லாம், பண்ணாலே நாம தெய்வத்துக்கு பக்கத்துல போய்டலாம். அப்புறம் தெய்வமே நம்மளையும் தெய்வமா மாத்திரும். (அதாவது, நாமளும் நெனைச்ச விஷயத்த நெனைச்ச மாதிரி பண்ணி முடிக்கலாம்)