புதன், 12 ஆகஸ்ட், 2015

பெயர்

உலகத்தில் சிரமமான வேலைகள் பல இருக்கிறது. விண்வெளியில் விவசாயம் செய்ய முடியும் என்று சமீபத்திய நாசா அறிவிப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு படைப்புக்கான பெயர் சூட்டல் என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடுவதில்லை!

ஒரு குழந்தையை படைத்துவிட்டு... ஒரு சினிமாவை படைத்துவிட்டு... ஒரு புதினத்தை படைத்துவிட்டு... அதற்கான பெயர்தேடல் இருக்கிறதே! கடைசிவரை ஒரு திருப்தியே இல்லாமல், நேரம் போதாமையால், ஏதோ ஒரு பெயரில் தேடுதலை முடித்துக்கொண்டு அந்தப் பெயரை சூட்டிவிட்டு, பின்னொரு நேரத்தில் பெயர் இதுவாக இருந்திருக்கலாம் என்று எண்ணுவோம்!

"துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு"

என்று வள்ளுவன் சொல்லி இருந்தாலும், மனம் ஏனோ அப்படி(யே) அடங்கி விடுவதில்லை!


ஆனால் சிலர் அனாயாசமாக செய்துவிட்டு போய் விடுவார்கள்... "அது எப்படி சார் ரெண்டு நொடியில ஒரு பேரை சொல்லிட்டீங்க?" என்று கேட்டால், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு மறைந்துவிடுவார்.

"பேர்ல என்ன சார் இருக்கு, நான் ராஜாதான் பேசுறேன்..." என்று வசூல்ராஜா பேசும்போது தத்துவம் போலவே இருந்தாலும்... எந்த ஒரு செயலையோ படைப்பையோ ஆவணப்படுத்தும்போது பெயர் முக்கியத்துவம் பெறுகிறது!

"பேர்ல என்ன இருக்கு?" என்று கேட்டதால, அவரு(கமல்) பேர வாக்காளர் லிஸ்டுல இருந்து எடுத்துட்டாங்க போல...

பெயரால் பெயர் பெற்றவர்கள் பெருமை பெரும்பேருதான்!

இப்ப எதுக்கு இந்த போஸ்டுன்னா, நானும் ஒரு பேர் வெக்குறது சம்பந்தமா குழப்பத்துல இருக்கேன்!