இந்த ஆண்டு நான் சந்தித்த நிகழ்வுகள், சந்தோஷங்கள், முகங்கள், கடவுள்கள்..இவற்றில் முக்கியமான ஒன்றை பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று தோன்றிய உடனே என் நினைவில் வந்தது 'புதிய தலைமுறை' வார இதழ்தான்.
இதுவரை நான் படித்த வார/மாத இதழ்கள் எல்லாவற்றிலும், பொதுவான செய்திகள், தகவல்கள் அல்லது அலசல்கள் இடம்பெற்றிருக்கும். அவை படித்தபின் அநேகமாக மறந்துவிடும். அனால், புதிய தலைமுறை எழுத்துக்கள் ஒவ்வொன்றும், மனதின் எல்லை வரை சென்று, தன் தனி முத்திரையை பதிக்கிறது. இந்த இதழின் பொறுப்பாளர் மிகவும் கவனத்துடன் எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் வடிகட்டி, ரத்தினங்களை மட்டும் இதழில் சேர்த்து பயனுள்ள அழகான வழியில் கொடுத்திருப்பது என் போன்றோருக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது.
நல்ல இதழ்களை தேடி நான் மிகவும் அலைந்திருக்கிறேன். எனக்கு அதன் வலி தெரியும். என்னைப்பொருத்தவரை இந்த இதழ் ஒரு விடிவெள்ளி. ஒவ்வொரு பக்கமும் அறிய தகவல்களையும் கொடுத்து, படிக்கும் எல்லா தரப்பு வாசகர்களையும் பயன்பெறவைக்கும் முயற்சி பாராட்டக்கூடியது. மேலும் ஆரம்பித்த சில வாரங்களிலேயே அதிக வாசகர்களை கொண்ட இதழ் இது என்ற பெருமையும் உண்டு.
2010 ம் ஆண்டு மேலும் பல சாதனைகளை படைத்து புதிய தலைமுறையை உருவாக்கிட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
அன்பு வாசகன்
உதயகுமார் ஸ்ரீ.