உடலின் வயதை மறந்து மனதின் வயதை கணக்கிடு!
எதோ தத்துவம் சொலராப்பல இருக்குது.
அது ஒன்னியும் இல்ல வாத்தியாரே!
அல்லாரும் பொறந்தநாள் கொண்டார்ரங்க. பொறந்த நாளே தெரியாதவன் இன்னா நாள் கொண்டாடுவான்? அப்போ அவன் வயசு இன்னான்னு ஆருக்காச்சும் தெரியுமா?
ஆனா மனசு கீதே, அதுக்கு இன்னா வயசாவுதுன்னு சுளுவா கண்டுக்கலாம். ஒவ்வொரு மனசனும் அவன் வாழ்ற எடத்துல ஒரு பொறுப்போட நடந்துகிட்டான்னா அவன சாதாரண மனுசன்னு சொல்லலாம். கொஞ்சம் சின்ன புள்ள மாதிரி பண்ணான்னா, அவன லூசுன்னு சொல்லிக்கலாம். அதே பிரியாத மாதிரியே பேசினான்ன, நெறையா படிச்சிட்டு ஏதேதோ பேசறான்னு சொல்லலாம்.
சொல்றது ஒன்னு செய்யறது ஒண்ணுன்னு இருந்தா, பெரிய மனுசன்னு சொல்லலாம். எதையுமே சொல்லாம வெறுமனே அவன்பாட்டுக்கு எதோ பண்ணிகினு இருன்தான்னா, இன்னா சொல்றது.. நமக்கு தெரியிலியேபா?
ஞானின்னு சொல்லலாமா?
இப்பிடி மனசுக்கு வயச நாம கண்டுக்கிறது ரொம்ப ஈசிதான? இன்னா சொல்ற?
செவ்வாய், 30 நவம்பர், 2010
திங்கள், 29 நவம்பர், 2010
நல்லகண்ணு பரமசிவம் - 1
"என்னதான் உலகமோ? என்ன பண்ணினாலும் குத்தம் கண்டுபுடிக்குது!" என்று புலம்பிக்கொண்டே ஆபீஸ் உள்ளே நுழைந்தார் நல்லகண்ணு.
வாய்யா நல்ல்ல்ல கண்ணு! ஏன் வரும்போதே புலம்பல்..வீட்டுக்காரம்மா காலையிலேயே நல்ல்ல்ல ஊத்தப்பம் குடுத்துச்சா....என்று நக்கலாக கேட்டார் பரமசிவம்.
போய்யா...உனக்கு எப்பவுமே நக்கல்தான். ஆனா நீ மட்டும் எப்பிடி சந்தோசமா இருக்கே. உனக்கும் நாலு பொண்ணு இருக்குது. நாலும் படிக்குது..கல்யாணம் பண்ணனும்..பொண்ண பெத்தவன் பாடு சொல்லி தெரியவேண்டியதில்ல...
இது பத்தாதுன்னு கூட பொறந்த 3 தம்பி 2 தங்கச்சிக்கு கல்யாணம் வேற பண்ணிட்ட..உனக்கு சம்பளமும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல... எல்லாம் கடவுள் விட்ட வழின்னு சாக்கு சொல்லாம, நீ சந்தோசமா இருக்கிற ரகசியத்த கொஞ்சம் சொல்லுப்பா..என்று ஒரு பெரிய விடைக்கான கேள்வியை சாதாரனமாய் கேட்டார் நல்லகண்ணு.
"நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ ஏன் பொலம்பிகிட்டே வந்தேன்னு மொதல்ல சொல்லு" என்றார் பரமசிவம்.
நான் சொல்லறத என்பசங்க கேக்க மாட்றாங்க. ஆனா யாரோ ஒரு பஸ் கண்டக்டர் சொல்றத நான் கேக்கணுமாம்?
ரொம்ப இழுக்காம விஷயத்தை சொல்லுய்யா?
நேத்து பஸ்சுல வரும்போது நம்ம ஆபீஸ் பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டு கொஞ்சம் மெதுவா ஏறினேன்.."வயசான காலத்துல யாருக்கு சொத்து சேக்க இப்பிடி அலையிற?" ன்னு கேக்குறான்.
இன்னைக்கு காலையில் வரும்போது "சில்லறை இல்லாம பஸ்ல எதுக்கு வர? " ன்னு சத்தம் போடுறான். நான் என்ன பண்ணினாலும் குத்தமாவே பாக்குறான். என்ன பண்றதுனே தெரியல!
பரமசிவம் தன்னுடைய குரலை சற்று சரிபடுத்திக்கொண்டு, பதில் சொல்லஆரம்பித்தார்.
ஒரு சூழ்நிலைக்குள்ள யோசிச்சுதான் நாம எந்த விஷயத்தையும் புரிஞ்சுக்கவோ இல்ல முடிவு எடுக்கவோ செய்யுறோம். சூழ்நிலை தாண்டி சிலர் யோசிச்சு சொல்லுவாங்க. அவங்க அதிபுத்திசாலிங்க. நமக்கு அதெல்லாம் வேணாம். ஒரு விஷயத்தை செய்யரதுக்கோ இல்ல ஒரு பிரச்சினைய தீக்கரதுக்கோ ரெண்டு மூணு வழி இருக்கும். மத்தவங்கல பாதிக்காம எத செய்ய முடியுமோ அதை நாம செய்யணும். சில நேரங்கள்ல அது கொஞ்சம் சிரமமான வேலையா இருந்தாலும் பால்மாறாம செய்யணும். அப்பிடி செய்யும்போது நமக்கு ஒரு வேலைய நல்லபடியா முடிச்சுட்டோங்கர திருப்தி இருக்கும். மனசுல திருப்தி இருந்தா நக்கல் இல்லாம வேற என்ன வரும்...
நல்லகண்ணு சற்றே தெளிந்தவராய் அவரோட சீட்டுக்கு போனார்.
(நக்கல் என்பதை தமாஷ் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவும்)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)