தொலைக்காட்சியில் புதுமுகங்களின் அறிமுக பேட்டியில் சொல்வதுபோல, எனக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஒரு விபத்துதான்.
ஊருக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கையில் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு. அடுத்த இரண்டு நாட்கள் நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? ஆமாம் என்றேன். உங்கள் கோட்-சூட்டை எடுத்துக்கொண்டு சொல்லுமிடத்திற்கு வந்துவிடுங்கள். "...........".
அடுத்த நாள் காலையில் 6 மணிக்கெல்லாம் வரவேண்டும் என்று உத்தரவு. அப்படியே சென்றேன். நீண்ட பிரயாணத்திற்கு பிறகு ஒரு கல்லூரிக்குள் நுழைந்து, நல்ல விருந்து கொடுத்து காக்க வைத்தனர். அப்புறம் என்ன? வழக்கம்போல மர்மம் தொடர நாங்கள் காத்திருந்த இடத்தை நடிகர் ரியாஸ் கான் கடந்துசெல்ல, பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சினிமாவில் நடிக்க வேண்டும். கதை சொல்லப்பட்டது. அப்புறம் திடீரென்று அழைப்பு. இயக்குனரின் அழைப்புதான்!!!
சென்று விட்டு அந்த வேகின்ற வெயிலில் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எங்கு உட்காரவேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கப்பட்டது. வெகுசிறிது நேரத்திற்குள் அங்கு ஒரு வெள்ளைக்காரி என்னை நோக்கி வர, அடடா..என்ன நடக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள, என்னருகில் இருந்தவரை தள்ளி உட்காரசொல்லிவிட்டு, அந்த வெள்ளைக்காரியை என்னருகில் அமரசெய்தார்கள். அவர் கனடா நாட்டு நடிகை அலியோனா. இருபது படங்களில் (கனடா நாட்டு) நடித்தவராம். அவரே சொன்னார்.
செல்ஃபி எடுத்துக்கொள்ளவா என்றெல்லாம் அனுமதி கேட்காமல், அவர் மொபைலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நானே க்ளிக்கிவிட்டேன்!
புறப்படும்போது ரியாஸ் கான் அவர்களுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன். இப்போதைக்கு இது மட்டுமே சொல்ல முடியும் என்பதால்... மேலும் தகவல்கள் சிறிது காலத்திற்குப் பின்.