“The opposite of a fact is a falsehood, but the opposite of one profound truth may very well be another profound truth.” நீல்ஸ் போர் (Neils Bohr) இவ்வாறு குறிப்பிடுகிறார்.
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே
மாணிக்கவாசகர் தன்னுடைய திருவாசகத்தில் பத்தொன்பதாவது பாட்டில் இவ்வாறு குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் யாரென்று அநேகமாக தெரிந்திருக்கும். நீல்ஸ் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த இயற்பியலாளர்.
நீல்ஸ் சொன்னதில் கவனிக்க வேண்டியது "One profound truth may very well be opposite of another profound truth." வாசகர் சொன்னது "உண்மையுமாய் இன்மையுமாய் விளங்கும் பரம்பொருள்."
வானில் உள்ள ஆயில்ய நட்சத்திரத்திற்கும் அஸ்வினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள வெறுமை (vacuum) என்பதும், நாம் கண்ணால் காணும் அனைத்துமாக இருப்பது ஒரு பொருளே.
இருவரும் சொல்ல வந்தது நேரெதிராக இருக்கும் இரு கூற்றுகளும் உண்மையாக இருக்கும் நிலை. நேசம் உள்ள மனிதனிடத்தில கோபம் இருக்கும். கோபத்தில் கொலைகூட செய்வான், செய்துவிட்டு தேம்பித்தேம்பி அழுவான்.
அறிவியல்பூர்வமாக அளவிட்டு நிரூபிக்க முடியாத விஷயங்கள் மட்டுமே இவ்வாறு முரண்பட்ட கருதுகோள்களை கொண்டிருக்கும்.
.
தொடரும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக