செவ்வாய், 13 அக்டோபர், 2015

ப்ளீஸ் அப்பா!

"ஒரு நிமிடம் இப்படி வந்து நில்லுங்கள் அப்பா..." - மகளின் வேண்டுகோளை காதில் போட்டுக்கொண்டாலும், வீட்டிற்குள் இருக்கும் அறைக்கு செல்வதற்கே துணை தேவைப்படுகிறதே! வாழ்க்கையில் இன்னும் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இருக்குமா? என்ற எண்ணமே மேலோங்கி...



"அதெல்லாம் முடியாது... ஒம்பதாவது படிக்கிற, இன்னும் தனியா பாத்ரூம் போக முடியல..." என்று எறிந்து விழுந்தார்... ஐ.டி. ஆபீஸில் பணிபுரிந்துவிட்டு, பதினோரு மணிக்கு படுக்கைக்கு சென்றவரை, 11:30க்கு எழுப்பினால், கோபம் வரத்தானே செய்யும்...

வயதுக்கு வந்தப்பின், பெண்களுக்கு இருக்கும் உச்சபட்ச Insecure feelingகிற்கு எந்த லாஜிக்கும் பார்க்க முடியாது. ஒன்று, விதியே என்று போய் நிற்க வேண்டும்! அல்லது, "அப்பாவால முடியலம்மா..." என்று தப்பிக்க வேண்டும்! கோபப்படுதல், அவர்களின் சார்புத்தன்மையை விலக்கிவிடாது... மாறாக வேறொருவரை சாரவேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள்.

கருத்துகள் இல்லை: