பள்ளிகூடத்துக்கு போய் பாடம் படிக்குறது ஒரு வகை... எல்லாருக்கும் சின்ன வயசுல(!) அனேகமா அது நடந்திருக்கும்...
பள்ளிக்கூட படிப்பு ஏதோ புரிஞ்சும் புரியாமையும் ஒரு வழியா முடிஞ்சிடும். படிப்பு முடிச்ச கையோட வேலைக்கு போடா(டி)ன்னு அனுப்பிருவாங்க.
கண்ண கட்டி காட்டுல விட்டாக்கூட பரவால்ல... காய், பழம் எல்லாம் சாப்பிட்டு ஏதோ ஒரு தெசையில வாழ்க்கைய ஓட்டிரலாம்... கடல்ல விட்டா எப்படிங்க பெரியவங்களே???
"ஒலகம் தெரியாம இருக்கான் எப்படித்தான் பொழைக்கப் போறானோ??" அப்படின்னு பொலம்பிட்டு விட்டுட்டா போதுமா? ஒங்க அனுபவத்த கொஞ்சம் சொன்னா அத வச்சு பொழப்போமே!!! அப்படின்னு நெனைக்குற இளசுகளுக்குதான் பொஸ்தகம் இருக்குது...
"படிப்பே ஏறலன்னுதான் வேலைக்கு வந்தோம்... இங்க வந்ததுக்கு அப்புறமும் படிக்கனும்னா, அட போப்பா..." - இப்படி செல பேரு! அவுங்களுக்கு அனுபவம் யார் தெரியுமா?? தெனமும் பாக்குற எல்லா மனுசங்களும்தான்.
அப்துல் ரஷீத் - ஆட்டோ டிரைவர். கூடுவாஞ்சேரில வாடகை வீட்ல வாழுற, குடும்ப கடன்களை முடித்துவிட்ட, தமிழ்நாடு போக்குவரத்துள வேலை செஞ்சி ஒய்வு வாங்குன, எண்பத்து நாலு வயசுக்காரர்.
தெனமும் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்குற மாமரத்து பிள்ளையார் கோவில்தான் அவருக்கு சர்வ அடைக்கலம். அங்கு வந்தால் அவருக்கு எந்த நாள்லயும் எந்த நேரத்துலயும் சவாரி கெடைக்குதாம்...
இன்னைக்கு கெடைச்ச அனுபவம். - தொடரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக