திங்கள், 18 ஜனவரி, 2016

Public Provident Fund எனும் அருமையான சேமிப்புத் திட்டம்


Public Provident Fund எனும் அருமையான சேமிப்புத் திட்டம்.
*************************************
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் அலுவலகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பொதுமக்கள் எல்லோரும் விதிவிலக்கின்றி பப்ளிக் ப்ரோவிடென்ட் ஃபண்டில் சேமிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கும் ஒரே திட்டம் இதுதான். குறைந்தபட்சம் ₹.500 முதல் லிமிட் இருக்கும்வரை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
திருமணம் மற்றும் மேற்படிப்புக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக இது இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
பதினைத்து வருடம் லாக் பீரியட் இருக்கும் இந்த அக்கௌன்ட்டில் நிலையான ரிடர்ன்ஸ் கிடைக்கும். வருடா வருடம் நிதிநிலை தாக்கல் செய்யப்படும்போது பி.பி.எஃப்.க்கான வட்டி விகிதம் அறிவிக்கப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி, வருடத்திற்கு ஒன்னரை லட்ச ரூபாய் வரை பி.பி.எஃப்.ல் சேமிக்கலாம்.
கொசுறு:
--------------
வருடத்திற்கு எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதை மே மாதத்தில் முடிவுசெய்து ஜூன் இறுதிக்குள் பி.பி.எஃப்.ல் மொத்தப் பணத்தையும் போடுவதால் அதிக வட்டி பெற முடியும்.

கருத்துகள் இல்லை: