உத்திராயணம் 2015 வீடியோ விளக்கம்பாலு சரவண சர்மாபழைய தாம்பரம் கிராம புரோகிதர் & ஜோதிடர் ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Posted by Tambaram Jothidar BaluSaravanan on 22 December 2015
செவ்வாய், 22 டிசம்பர், 2015
உத்திராயணம்
வியாழன், 22 அக்டோபர், 2015
கடலை!
மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிய
அரியவாம் கடலை போடுதல்
என்றாலும், வேர்கடலை வாயில் போடுதல் அவ்வளவு அரிதில்லை! வறுத்தோ அவித்தோ ஒவ்வொரு நாளும் ஐம்பது கிராம் வீதம் சாப்பிடலாம். அதில் கொழுப்பு அதிகம் உண்டு என்று சிலர் சொல்லுவார்கள்.. அது சரிதான்... ஆனால் சக்கரையைப் பற்றி பல குழப்ப கருத்துகள் இருப்பதுபோல் இந்த கொழுப்பு பற்றியும் பல குழப்ப கருத்துகள் நிலவுகிறது... கீழே இருக்கும் அட்டவணை அந்தக் குழப்பங்களைப் போக்கும் என்று எண்ணுகிறேன்.
Nutrition Facts – Peanut (வேர்கடலை) Total Calories: 567
Amount Per 100 grams

Total
Fat
|
49 g
|
Saturated
fat நிறைவுற்ற
கொழுப்பு
|
7 g
|
Polyunsaturated fat பல்நிறைவுறா கொழுப்பு |
16 g
|
Monounsaturated
fat நிறைவுறா
கொழுப்பு
|
24 g
|
Cholesterol
சிதையாக்
கொழுப்பு
|
0 mg
|
Sodium
|
18 mg
|
Potassium
|
705
mg
|
Total
Carbohydrate
|
16 g
|
Dietary
fibre நார்
சத்து
|
9 g
|
Sugar
|
4 g
|
Protein
|
26 g
|
Vitamin
A
|
0%
|
Vitamin
C
|
0%
|
Calcium
|
9%
|
Iron
|
25%
|
Vitamin
D
|
0%
|
Vitamin
B-6
|
15%
|
Vitamin
B-12
|
0%
|
Magnesium
|
42%
|
கூடுதல் தகவல்:
பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி முன்பாக ஒரு கைப்பிடி அளவு, வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
- பசுமை இந்தியா, ஆசிரியர் - டாக்டர்.சி. இரா. தமிழ்வாணன்.
புதன், 21 அக்டோபர், 2015
ஆயுத பூசை
கடவுள், சாமி, கோவில் இதையெல்லாம் தாண்டி தமிழனின் விழாக்களில் எனக்கு அலாதி பிரியம் உண்டு...
உணவு முறை முதல், அந்தந்த விழாக்களில் செய்யவேண்டிய சம்பத்துகள், வாழ்வின் ஒவ்வொரு காலத்திலும், வருடம் முழுக்க, பண்பாட்டை ஒட்டி, தட்பவெப்ப சூழலை ஒட்டி, உடல்நிலைகளை ஒட்டி, உறவுகளை ஒட்டி, இப்படி எல்லாத்தையும் ஓட்டிப் பார்க்க வேண்டும்...என்ற எண்ணம் என்னை மிகவும் ஈர்த்த ஒன்று!
பிரிந்தாலும் பிரிந்து இருந்தாலும், சேர்த்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கி, அதில் நினைவுகளை புகுத்தி, நெகிழ்ச்சி உண்டாக்கி, அன்பை போற்றி இருப்பான்.
திரைகடல் ஓடி சாதித்ததும் அவன்தான். கூடும் கலையும், கூட்டும் கலையும் கண்டவனும் அவன்தான்.
இன்றைய தினம் ஆயுத பூசை. வாழ்வின் ஆதாரமான பொருள், இன்பம், வீடு, இவற்றில் முதலாவதை பெற எல்லோருமே ஒரு தொழில் செய்கிறோம். எல்லாத் தொழிலிலும் ஒரு ஆயுதத்தை வைத்தே செய்வோம். பேனா முதற்கொண்டு சுத்தி, கடப்பாரை, மண்வெட்டி, ஊதுகுழல், உளி, வாகனம், கணினி, ஒலிவாங்கி (Mic), என நீண்டு கொண்டே போகும் நாம் பயன்படுத்தும் பொருட்கள்.
பொறியியல் சொல்லும் தத்துவம்... எல்லாப் பொருட்களுக்கும் ஒய்வு மற்றும் பராமரிப்பு வேண்டும்! இந்த பண்டிகையின் மூலம் "பராமரிப்பை" கட்டாயமாக்கி உள்ளார்கள்.
பராமரிப்பு அவ்வப்போது செய்யும் நபர்கள், வெறுமனே ஒய்வு கொடுத்தால் போதுமானது...
செயின்ட் கொபைன் என்கிற 'ஆடி' (கண்ணாடி) தயாரிக்கும் தொழிற்சாலையில் மண் மற்றும் சில பொருட்கள் கொண்டு அதிவெப்ப சூழலில் குழம்பாக்கி அதனை குளிர்வித்துதான் ஆடி செய்கிறார்கள். அந்த அடுப்பானது இருபது வருடத்திற்கு நிறுத்தாமல் செயல்பட வேண்டும். அதுதான் அதன் ஆயுட்காலமும் கூட.
இப்படி சில விதிவிலக்குகளும் உண்டு! எந்த விழாவாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்து செய்ய வேண்டும்! எந்திரன் படத்தில் வருவதுபோல செய்யக்கூடாது! சரிதான???

செவ்வாய், 13 அக்டோபர், 2015
ப்ளீஸ் அப்பா!
"ஒரு நிமிடம் இப்படி வந்து நில்லுங்கள் அப்பா..." - மகளின் வேண்டுகோளை காதில் போட்டுக்கொண்டாலும், வீட்டிற்குள் இருக்கும் அறைக்கு செல்வதற்கே துணை தேவைப்படுகிறதே! வாழ்க்கையில் இன்னும் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இருக்குமா? என்ற எண்ணமே மேலோங்கி...
"அதெல்லாம் முடியாது... ஒம்பதாவது படிக்கிற, இன்னும் தனியா பாத்ரூம் போக முடியல..." என்று எறிந்து விழுந்தார்... ஐ.டி. ஆபீஸில் பணிபுரிந்துவிட்டு, பதினோரு மணிக்கு படுக்கைக்கு சென்றவரை, 11:30க்கு எழுப்பினால், கோபம் வரத்தானே செய்யும்...
வயதுக்கு வந்தப்பின், பெண்களுக்கு இருக்கும் உச்சபட்ச Insecure feelingகிற்கு எந்த லாஜிக்கும் பார்க்க முடியாது. ஒன்று, விதியே என்று போய் நிற்க வேண்டும்! அல்லது, "அப்பாவால முடியலம்மா..." என்று தப்பிக்க வேண்டும்! கோபப்படுதல், அவர்களின் சார்புத்தன்மையை விலக்கிவிடாது... மாறாக வேறொருவரை சாரவேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள்.

திங்கள், 12 அக்டோபர், 2015
கோராவின் நாத்திகம்
Gandhiji found that though Gora loved to call himself an atheist, he was a sincere and serious-minded man. He was, what might be called, 'a man of God'. Indeed, he resented being considered 'godless', and insisted in distinguishing
between atheism and godlessness.
This looks puzzling and self-contradictory. Gora tries to overcome the contradiction by saying that "Godlessness is negative; it merely denies the existence of God. Atheism is positive.... It means self-confidence and free will." It is, I believe, a meaning given to this word by Gora himself, and not easily
knowable from its structure.
Gora - Goparaju Ramchandra Rao
Atheism - நாத்திகம்.
தமிழாக்கம்:
"நாத்திகம் பேசுவதென்பது, கடவுளைப் புறக்கணிப்பதல்ல... எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதல்ல... மாறாக, நாத்திகம் என்பது நேர் சிந்தனை உடையது. மனிதன் எனும் உயிரினம், கடவுள் எனும் சிக்கலிலிருந்து வெளிவர வேண்டும்." என்று அவர் கருத்தை முன்வைக்கிறார்.
இந்தப் பதவுரையை படித்தபின், ராமானுஜர் முன்வைத்த "விஷிஷ்டத்வைதம்" பற்றி நாம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
பிறப்பு முதலே "ஸ்ரீவைஷ்ணவம்" என்ற தொட்டிலில் தவழ்ந்தவர் ராமானுஜர். அவர் பிறந்த ஊரில், சரியாக 1990-2005 வரை வாழ்ந்தேன் என்ற நினைப்பே மகிழ்வைத் தருகிறது. பெருமாளே எல்லாம், என்று போதிக்கப்பட்டு, தத்துவங்களை கற்கத் துவங்கிய நாட்களில், ராமானுஜருக்கு ஏற்பட்ட, அடிப்படை சந்தேகங்களை, அதாவது, இடைச்செருகல்கள் என்று அவர் நினைத்து அவற்றைப் பற்றி எழுப்பிய கேள்விகள், அவரின் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு வளர்ந்தது என்றால், அவர் எவ்வளவு "நாத்திகம்" பேசியிருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.
எந்தவொரு கொள்கையானாலும், சமூக நலனை மட்டுமே முன்னிறுத்த வேண்டும், வேறுபாடுகள் பாராட்டக்கூடாது, அழிவைத்தரும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டும் என்று அவர் எழுப்பிய கேள்விகளும், செய்த சமத்துவ செயல்களும், அவரை மக்கள் மத்தியில் பெருமதிப்புடையவராக உயர்த்தியது.
அவரின் கொள்கைகளை "விஷிஷ்டத்வைதம்" எனும் பெயரிட்டு, பரப்ப நினைத்த வேளையே அவர் உலகை விட்டு மறைந்துவிட்டார். "இந்துமதம்" எனும் ஜீவநதியின் கிளைதான் என்று சொல்லி, பெருமாளின் கோவிலின் உள்ளேயே அவருக்கும் சிலை வைத்து சாமியாக்கி வைத்துவிட்டார்கள் சில ஈனப்பிறவிகள்.
பகுத்தறிவு பேசிய பெரியாரையும் இப்போதுள்ள மாக்கள், சிலை வைத்து, நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய இடைவெளியில், அவரையும் கடவுளாக்கி விடுவார்கள் என்றே தோன்றுகிறது.
ஆண்டாண்டு காலமாக சொல்லிவந்த சொல்மட்டும் இன்னும் பச்சைப்பசேலென உயிர்ப்போடு இருக்கிறது.
"போர்க்களம் மாறலாம்... போர்கள் மாறுமா?"
எப்போதும் எதிர் சிந்தனையுள்ள இரு விஷயங்கள் இருக்கும். அவை போரிட்டுக்கொண்டே இருக்கும்!
வாழ்கையே..போர்க்களம்!!!

திங்கள், 5 அக்டோபர், 2015
பிள்ளையா? தொல்லையா?
இளைஞர்களுக்கு வணக்கம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பாரமாக சித்தரிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், இளம் தம்பதிகளுக்கும் இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
கடந்த சில வருடங்களாக நான் சந்தித்த மாணவர்களையும், என்னிடம் நேரடியாக பயிற்சி பெற்ற மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்கள் பேசியவற்றையும் கணக்கில் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக அமைய மூன்று அடிப்படை தேவைகள் இருக்கிறது. உணவு, உடை, வீடு. இவற்றை ஏற்கெனெவே போதுமான அளவு வைத்திருப்பவர்கள் கல்வியை பெரிய தேவையாக கொண்டிருப்பதில்லை. உணவு, உடை, வீடு இவற்றை வாங்கி நமக்கான வாழ்வை தொடங்க நமக்கு பொருள் தேவைப்படுகிறது. அதாவது பணம் தேவைப்படுகிறது.
உழைத்தால் சம்பாதிக்கலாம் என்ற நிலை எப்போதுமே உண்டு. எங்கு உழைக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் முடிவு. பிறரிடம் வேலை செய்ய வேண்டுமா? அல்லது நாமே ஒரு தொழில் துவங்கி வேலை செய்ய வேண்டுமா? வேலையே செய்யாமல் சம்பாதிக்கலாம் என்ற விவாதுக்குள் இப்போது செல்ல வேண்டாம்.
பிறரிடம் வேலை செய்யவோ, சுய தொழில் துவங்கவோ நமக்கு “அறிவு” தேவைப்படுகிறது. அங்கேதான் “கல்வி”யின் முக்கியத்துவம் இருக்கிறது. கல்வி என்பது அறிவைப் பெறுவதற்குதான். வேறு எதற்கும் இல்லை. பன்னிரண்டாம் வகுப்புவரை நாம் கற்ற கல்வி, நம்முடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாகவே இருக்கிறது. இருந்தாலும் சமுதாய அந்தஸ்து என்ற ஒன்று “வசதி” என்பதை அடையவேண்டும் என்று வற்புறுத்துகிறது. அதன் பின்னால் சென்றுதான் இன்று பலரும் நிம்மதியை இழந்து நிற்கின்றனர்.
அதாவது மேற்படிப்பு என்று துவங்கி, பணம் ஈட்டும் படிப்பு என்று தேடி, அதன் பின்னாலேயே அலைந்து ஒருவாறாக முன்னே செல்பவர்கள் சென்றுவிட, எப்போதும் போல் சிலர்மட்டும் பின்னால் தள்ளப்பட்டு நிற்கிறார்கள். இந்த முன்னால், பின்னால் என்கிற விளையாட்டு “மதிப்பெண்” என்ற ஒன்றை வைத்து விளையாடப்படுகிறது. “பங்குச் சந்தையில்” வெறும் எண்களை வைத்து விளையாடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
சரி, விளையாட்டில் இறங்கிவிட்ட பின்னர், விளையாடியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. வெற்றி பெரும் வகையில் உலக அளவில் எப்படி எல்லா போட்டிகளையும் வெல்வது என்கிற வித்தைகள் கற்றுக்கொண்டால், நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதும் உண்மைதான்.
மாறிவரும் உலக சூழலுக்கேற்ப நமது பண்டைய கல்வி முறையிலிருந்து இன்று முற்றிலும் வேறுபட்ட முறையில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறோம். அதன் முக்கிய நோக்கம் உலகளாவிய வகையில் வேலைவாய்ப்பை பெற்று நம்முடைய பொருளாதார தேவையை, பூர்த்தி செய்கிறோம்.
மன்னராட்சி முறையில் இருந்து மக்களாட்சி முறைக்கு வந்தபிறகு, உலக வர்த்தகம் விரிவடைந்த பிறகு, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு மேம்பட்ட பிறகு, உள்ளூரில் பெட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என்கிற வாதம் “தோல்வியின்” அடையாளமாகி விடுகிறது.
உலக வர்த்தகம் என்பது உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் “உற்பத்தியாளர்கள்” ஒரே நாட்டில் மட்டும் நில்லாமல் மற்ற நாடுகளிலும் உற்பத்தியை பெருக்கி விநியோகம் செய்வதுதான். விவசாயம் கூட, நம்மால் வேறு நாட்டிற்கு சென்று செய்ய முடியும். எந்த நாட்டில் இயற்கை வளம், மண் வளம், மற்றும் நீர் வளம் இருக்கிறதோ, அங்கே சென்று நிலங்களை வாங்கி நம்முடைய விவசாய அறிவை உபயோகித்து வேளாண்மை செய்ய முடியும். இப்படி யாரும் இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் இது நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சரி விஷயத்துக்கு வருவோம். என்ன சொல்ல வருகிறேன் என்றால், கல்வி-பணம் என்று நேர்கோட்டில் பயணத்தை வைத்து பெற்றோர்களும் பிள்ளைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். காரணம், மேலே குறிப்பிட்டது போல, நம்முடைய கல்வி முறை மாறிவிட்ட பிறகு அதை முழுதாக உள்வாங்கி, கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் வகையில் பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. பாடங்கள் எளிதாகவும் உலக அளவில் போட்டி போடக்கூடிய அளவில் இருந்தாலும், அதை மாணவர்களிடத்தில் சேர்க்கக்கூடிய திறன் வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைந்து விட்டது. தலைமுறைகளை கட்டிக்காத்த பெருமை ஆசிரியர்களையே சேரும்.
வாழ்க்கைக்கு கல்வி முக்கியம், கல்வியை போதிக்கும் ஆசிரியரும் அதே முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஆனால், இன்று ஆசிரியர்கள் மதிப்பை இழந்ததற்கு காரணம், தகுதி இல்லாத ஆசிரியர்களை வைத்திருக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும். அதைத் தாண்டி, அறிவு இருந்தாலும், ஆசிரியருக்கு இருக்கவேண்டிய ஒழுக்க நெறிகளை, அவர்கள் பின்பற்றாமல் இருப்பதும்தான்.
இன்றைய முக்கியத் தேவை நல்ல அரசியல்வாதிகளோ, நல்ல அரசுப் பணியாளர்களோ இல்லை. ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த ஆசிரியர்கள்தான் இன்றைய தலையாய தேவை. மண்ணை மலடாக்கிவிட்டு பயிர் செய்தால், எப்படி விளையும்? தகுதியான ஆசிரியர்கள் இல்லாமல், கல்வித் திட்டங்களையும், புத்தகங்களையும் பள்ளிகளையும் மட்டும் வைத்திருந்து என்ன புண்ணியம்? சிந்திப்போம் இளைஞர்களே.
(தொடரும்)

புதன், 12 ஆகஸ்ட், 2015
பெயர்
உலகத்தில் சிரமமான வேலைகள் பல இருக்கிறது. விண்வெளியில் விவசாயம் செய்ய முடியும் என்று சமீபத்திய நாசா அறிவிப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு படைப்புக்கான பெயர் சூட்டல் என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடுவதில்லை!
ஒரு குழந்தையை படைத்துவிட்டு... ஒரு சினிமாவை படைத்துவிட்டு... ஒரு புதினத்தை படைத்துவிட்டு... அதற்கான பெயர்தேடல் இருக்கிறதே! கடைசிவரை ஒரு திருப்தியே இல்லாமல், நேரம் போதாமையால், ஏதோ ஒரு பெயரில் தேடுதலை முடித்துக்கொண்டு அந்தப் பெயரை சூட்டிவிட்டு, பின்னொரு நேரத்தில் பெயர் இதுவாக இருந்திருக்கலாம் என்று எண்ணுவோம்!
என்று வள்ளுவன் சொல்லி இருந்தாலும், மனம் ஏனோ அப்படி(யே) அடங்கி விடுவதில்லை!
ஆனால் சிலர் அனாயாசமாக செய்துவிட்டு போய் விடுவார்கள்... "அது எப்படி சார் ரெண்டு நொடியில ஒரு பேரை சொல்லிட்டீங்க?" என்று கேட்டால், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு மறைந்துவிடுவார்.
"பேர்ல என்ன சார் இருக்கு, நான் ராஜாதான் பேசுறேன்..." என்று வசூல்ராஜா பேசும்போது தத்துவம் போலவே இருந்தாலும்... எந்த ஒரு செயலையோ படைப்பையோ ஆவணப்படுத்தும்போது பெயர் முக்கியத்துவம் பெறுகிறது!
"பேர்ல என்ன இருக்கு?" என்று கேட்டதால, அவரு(கமல்) பேர வாக்காளர் லிஸ்டுல இருந்து எடுத்துட்டாங்க போல...
பெயரால் பெயர் பெற்றவர்கள் பெருமை பெரும்பேருதான்!
இப்ப எதுக்கு இந்த போஸ்டுன்னா, நானும் ஒரு பேர் வெக்குறது சம்பந்தமா குழப்பத்துல இருக்கேன்!

"துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு"

வியாழன், 23 ஜூலை, 2015
எனக்கும் அது நடந்தது...
தொலைக்காட்சியில் புதுமுகங்களின் அறிமுக பேட்டியில் சொல்வதுபோல, எனக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஒரு விபத்துதான்.
ஊருக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கையில் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு. அடுத்த இரண்டு நாட்கள் நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? ஆமாம் என்றேன். உங்கள் கோட்-சூட்டை எடுத்துக்கொண்டு சொல்லுமிடத்திற்கு வந்துவிடுங்கள். "...........".
அடுத்த நாள் காலையில் 6 மணிக்கெல்லாம் வரவேண்டும் என்று உத்தரவு. அப்படியே சென்றேன். நீண்ட பிரயாணத்திற்கு பிறகு ஒரு கல்லூரிக்குள் நுழைந்து, நல்ல விருந்து கொடுத்து காக்க வைத்தனர். அப்புறம் என்ன? வழக்கம்போல மர்மம் தொடர நாங்கள் காத்திருந்த இடத்தை நடிகர் ரியாஸ் கான் கடந்துசெல்ல, பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சினிமாவில் நடிக்க வேண்டும். கதை சொல்லப்பட்டது. அப்புறம் திடீரென்று அழைப்பு. இயக்குனரின் அழைப்புதான்!!!
சென்று விட்டு அந்த வேகின்ற வெயிலில் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எங்கு உட்காரவேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கப்பட்டது. வெகுசிறிது நேரத்திற்குள் அங்கு ஒரு வெள்ளைக்காரி என்னை நோக்கி வர, அடடா..என்ன நடக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள, என்னருகில் இருந்தவரை தள்ளி உட்காரசொல்லிவிட்டு, அந்த வெள்ளைக்காரியை என்னருகில் அமரசெய்தார்கள். அவர் கனடா நாட்டு நடிகை அலியோனா. இருபது படங்களில் (கனடா நாட்டு) நடித்தவராம். அவரே சொன்னார்.
செல்ஃபி எடுத்துக்கொள்ளவா என்றெல்லாம் அனுமதி கேட்காமல், அவர் மொபைலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நானே க்ளிக்கிவிட்டேன்!
புறப்படும்போது ரியாஸ் கான் அவர்களுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன். இப்போதைக்கு இது மட்டுமே சொல்ல முடியும் என்பதால்... மேலும் தகவல்கள் சிறிது காலத்திற்குப் பின்.
ஊருக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கையில் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு. அடுத்த இரண்டு நாட்கள் நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? ஆமாம் என்றேன். உங்கள் கோட்-சூட்டை எடுத்துக்கொண்டு சொல்லுமிடத்திற்கு வந்துவிடுங்கள். "...........".
அடுத்த நாள் காலையில் 6 மணிக்கெல்லாம் வரவேண்டும் என்று உத்தரவு. அப்படியே சென்றேன். நீண்ட பிரயாணத்திற்கு பிறகு ஒரு கல்லூரிக்குள் நுழைந்து, நல்ல விருந்து கொடுத்து காக்க வைத்தனர். அப்புறம் என்ன? வழக்கம்போல மர்மம் தொடர நாங்கள் காத்திருந்த இடத்தை நடிகர் ரியாஸ் கான் கடந்துசெல்ல, பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சினிமாவில் நடிக்க வேண்டும். கதை சொல்லப்பட்டது. அப்புறம் திடீரென்று அழைப்பு. இயக்குனரின் அழைப்புதான்!!!
சென்று விட்டு அந்த வேகின்ற வெயிலில் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எங்கு உட்காரவேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கப்பட்டது. வெகுசிறிது நேரத்திற்குள் அங்கு ஒரு வெள்ளைக்காரி என்னை நோக்கி வர, அடடா..என்ன நடக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள, என்னருகில் இருந்தவரை தள்ளி உட்காரசொல்லிவிட்டு, அந்த வெள்ளைக்காரியை என்னருகில் அமரசெய்தார்கள். அவர் கனடா நாட்டு நடிகை அலியோனா. இருபது படங்களில் (கனடா நாட்டு) நடித்தவராம். அவரே சொன்னார்.
செல்ஃபி எடுத்துக்கொள்ளவா என்றெல்லாம் அனுமதி கேட்காமல், அவர் மொபைலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நானே க்ளிக்கிவிட்டேன்!
செவ்வாய், 23 ஜூன், 2015
சாப்பாடு - பெரும்பாடு
உயிர்வாழ அத்தியாவசியத் தேவையான உணவை யாரும் இங்கே வெறுப்பதில்லை. ஆனாலும் விவசாயியை நாம் மனதளவில் உயர்வாக நினைத்தாலும், சமூக அந்தஸ்து என்று வரும்போது குறைத்தே மதிப்பிடுகிறோம். காரணம் சாதாரண விவசாயியின் தோற்றமும் அவர் சம்பாதனையும் மற்றவர்களைக் காட்டிலும் தாழ்ந்தே இருக்கிறது.
வேலை சார்ந்து உருவான இந்திய சமூகக் கட்டமைப்பை "புதுமை" பேசுகிறேன் என்று சொல்லி அதன் அடிவேரில் அமிலத்தை ஊற்றியவர்கள், இறந்தபின்னும், தங்கள் வாரிசாக சில அமில ஆலைகளை உருவாக்கிவிட்டு சென்றுவிட்டனர். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து எனும் இவைதான் அடிப்படை தொழில்களாக பாவிக்கப்பட்டன. அதன் பொருட்டே சமூக கட்டமைப்பும் உருவானது.
இன்று எல்லோருக்கும் கல்வி என்கிற பெயரில் குப்பைத் தகவல்களை மட்டும் குழந்தைகளின் மூளையில் நிரப்பும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. வாழ்க்கைக்கல்வி என்றால் என்ன, நடைமுறை அறிவு என்றால் என்ன என்று சிறு துளி அளவு கூட மாணவர்களுக்கு..., ஏன், இன்று பெருநிறுவனங்களில் வேலை செய்து பெரிதாக பணம் பண்ணுகிறோம் என்று பீத்திக்கொள்பவர்களுக்குக் கூடத்தெரியாது.
சம்பாதிக்க மட்டுமே அறிவு இங்கே தரப்படுகிறது. அது பாதி அறிவுதான்.செலவு செய்வது எப்படி? எந்தப் பொருளை எந்த இடத்தில, எந்த நேரத்தில் வாங்கவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இன்றி, சேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாத மலட்டு சமுதாயத்தை உருவாக்கிய கல்வியைத்தான் இன்று எல்லோரும் நாடிச்சென்று, நடவு செய்த பூமியை விற்று, ஏமாந்து, தெருவில் பிச்சை எடுக்கும் அளவிற்கு வந்து விட்டோம்.
எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் சாப்பிடவேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் உடுத்த வேண்டுமோ அதையும் விடுத்து அடையாளங்களை, அறிவை, சொத்தை, மானத்தை எல்லாவற்றையும் இழந்த சமூகமாக இருக்கிறோம். ஆனாலும் சிறப்பான வாழ்நிலையை பெற்றுள்ளோம் என்கிற மாயையிலே வாழ்கிறோமே, இதைவிடக் கேவலம் எந்த நாட்டில் நடந்துவிடக்கூடும்??
குண்டடி பட்டு தினம் தினம் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பலியாவதைக் காட்டிலும் இழிநிலையில் இருக்கிறோம். எதை எடுத்தாலும் கலப்படம். வாங்கும் எல்லா பொருட்களும் இரண்டாம் அல்லது மூன்றாம் தரம், அல்லது தரமே இல்லை. அதைத் தட்டிக்கேட்கவும் யாரோ ஒரு முகம் தெரியாத ஹீரோ வரவேண்டி இருக்கிறது. ஏனெனில் முகம் தெரிந்த ஹீரோக்கள் துடைப்பதற்கு காகிதம் இல்லாமல் தவிக்கும் நிலையில், அவர்கள் நிஜ ஹீரோக்களாக ஆவது எதிர்பார்க்க முடியாது.
இத்தனைத் துயரத்திலும் நண்பர் திருமூர்த்தி அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிடுவது சிறந்த உதாரணமாகும். விவசாயத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு செய்து, அதை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் எதுவும் புதுமை இல்லையென்றாலும், அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளையும் மறுமொழிகளையும், அவருக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களையும் பார்க்கும்போது, "தம்மால் செய்யாமுடியாமல் பொருளாதார வலைப்பின்னலில் சிக்கி தவிக்கிரோமே!" என்று ஆதங்கப்படுவதாகவே தோன்றுகிறது.
நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமில்லாத கூக்குரல்கள் கேட்பதாகவும் தோன்றுகிறது. மாற்றம் வேண்டுவோர்... சும்மா இருந்துவிட்டால் நடக்குமா? என்ன செய்ய வேண்டும்? உங்கள் பங்கு என்ன? தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்...
நன்றி
உதயகுமார் ஸ்ரீ.

திங்கள், 22 ஜூன், 2015
எந்த வாலைப் பிடிப்பது?
நன்றி
உதயகுமார் ஸ்ரீ
ஞாயிறு, 21 ஜூன், 2015
காற்று - புரட்சி!
அடிமையாய் இருப்பதில் உள்ள சுகம் என்னவென்று அடிமைகளுக்கு மட்டுமே
தெரியும். ஏதோ ஒரு காலகட்டத்தில் எல்லோருமே அடிமையாய் இருந்திருப்போம்.
சிலருக்கு அதுவே பிடித்துப்போய்விட்டது. பலருக்கு பழகிவிட்டது.
சிலருக்கு மட்டுமே புழுக்கமாக இருக்கிறது. புழுக்கமாக உணருபவர்தான் காற்றை உள்ளே கொண்டுவரவேண்டும். காற்று உள்ளே வந்தவுடன், வசதியாக சிலர்மட்டும் அடிமை வேஷம் கலைக்க வருவார்கள். சுயநலவாதிகள் என்றோ சந்தர்ப்பவாதிகள் என்றோ சமத்துபிள்ளை என்றோ எப்படியாவது பெயர்சொல்லுங்கள். அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. அதுபோன்றவர்களை தடுக்கவும் வழியில்லை.
அவர்களை மனதில் வைத்துக்கொண்டு, இந்த சுயநலவாதிகளுக்காக நம்முடைய உழைப்பு சென்றுவிடுமே என்று நினைத்து புழுக்கம் கொண்டவர்கள் காற்றை வரவைக்காமல் இருந்துவிட முடியாது.
காற்று, சுத்தமான காற்று, அதுவே இன்றைய கட்டாயத் தேவை!
புரட்சி மலரும்!
On Facebook!

வியாழன், 11 ஜூன், 2015
குடும்பத்தலைவிகளின் குமுறல்
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு கேஸ்கள் "குடிக்கும் கணவனின்
தொல்லைகள்" என்ற குற்றச்சாட்டோடு வந்துள்ளது. இதில் ஒரு பெண் சேர்ந்து வாழ
விருப்பம் இல்லை என்றும், மற்றொருவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறினர்.
இரண்டு பேருக்குமே சொந்த வீடு உள்ளது. சிறிய அளவில் கடனும் உள்ளது.
சுமைகள் பெரிதாக இல்லாததனால் சிறிய அளவில் குடிக்க ஆரம்பித்து இப்போது
குடும்ப செலவுகளுக்கு பணம் தராமல் முழுவதும் குடிக்கே செலவு செய்யும்
நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் அந்த மனைவிகள் இருவரும் பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைசெய்து குடும்ப செலவையும் குழந்தைகளின் பள்ளி செலவையும் செய்து வருவதாக சொன்னார்கள். இதில் ஒரு பெண் என் வீட்டில் பணி செய்கிறார்.
தமிழ்நாட்டில் மது ஒழிப்புக்கு உரத்த குரல்கள் கேட்டாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால் குடும்ப பெண்களின் பலத்த எதிர்ப்புக்கு தமிழக அரசு ஆளாகும் என்பதில் சந்தேகமில்லை.

லேபிள்கள்:
அரசியல்,
ஆலோசனைகள்,
மது,
மனோதத்துவம்
உண்மையுமாய் இன்மையுமாய்
“The opposite of a fact is a falsehood, but the opposite of one profound truth may very well be another profound truth.” நீல்ஸ் போர் (Neils Bohr) இவ்வாறு குறிப்பிடுகிறார்.
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே
மாணிக்கவாசகர் தன்னுடைய திருவாசகத்தில் பத்தொன்பதாவது பாட்டில் இவ்வாறு குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் யாரென்று அநேகமாக தெரிந்திருக்கும். நீல்ஸ் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த இயற்பியலாளர்.
நீல்ஸ் சொன்னதில் கவனிக்க வேண்டியது "One profound truth may very well be opposite of another profound truth." வாசகர் சொன்னது "உண்மையுமாய் இன்மையுமாய் விளங்கும் பரம்பொருள்."
வானில் உள்ள ஆயில்ய நட்சத்திரத்திற்கும் அஸ்வினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள வெறுமை (vacuum) என்பதும், நாம் கண்ணால் காணும் அனைத்துமாக இருப்பது ஒரு பொருளே.
இருவரும் சொல்ல வந்தது நேரெதிராக இருக்கும் இரு கூற்றுகளும் உண்மையாக இருக்கும் நிலை. நேசம் உள்ள மனிதனிடத்தில கோபம் இருக்கும். கோபத்தில் கொலைகூட செய்வான், செய்துவிட்டு தேம்பித்தேம்பி அழுவான்.
அறிவியல்பூர்வமாக அளவிட்டு நிரூபிக்க முடியாத விஷயங்கள் மட்டுமே இவ்வாறு முரண்பட்ட கருதுகோள்களை கொண்டிருக்கும்.
.
தொடரும்!

அறிவியல்,
திருவாசகம்,
மாணிக்கவாசகர்,
Neils Bohr,
Science
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)