சனி, 2 அக்டோபர், 2010

சில புரிதல்கள்

நேற்று என் நண்பனோடு நான் பேசிக்கொண்டிருக்கும்போது தோன்றிய ஒரு விஷயம். (கவிதை வடிவில் - ஒரு சிறு முயற்சி - பிழை இருந்தால் பின்னூட்டமிடவும்)

என் மொழி
என் மொழியே அல்ல
எவர் மொழியோ

என் மொழி
உன் மொழியாகலாம்
உன் மொழி
என் மொழியாகலாம்!

எனினும்,
என் வழி என்றுமே
என் வழிதான்.

அதிகபட்சமாக சினிமாத் துறையில் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டிருப்போம். "என் கதையை திருடிவிட்டார்கள். என் கற்பனை எனக்கு மட்டுமே சொந்தமானது" என்று.

நாம் பிறக்கும்போது சில அடிப்படை செயல்களான உண்பது, அழுவது இன்ன பிற போன்றவற்றிற்கான புரிதல்கள் மூளையில் பதியப்பட்டிருக்கும் (அனாடமி). ஆனால் நாம் சிந்திக்கும் எல்லாமே நாமே சுயமாக செய்வதாக நினைத்திருந்தால் அங்கே ஒரு பிழை ஏற்படுகிறது. நம் சிந்தனையில் வெளிப்படும் விஷயங்கள், இந்த சமுதாயம் தந்தது. நம்மை சுற்றி உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிரற்றவைகளுக்கும் அந்தச் சிந்தனையில் பங்கு இருக்கிறது.

சிந்திப்பதன் மூலம் செயல் உருவாகிறது. ஒரு செயல் மற்றொரு சிந்தனைக்கோ செயலுக்கோ விதையாக அமைகிறது. Stimuli and Response என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

சரி இன்னாதான் விஷயம், என்று கேட்பவர்களுக்கு, ஒரு பதில். ஏற்கெனெவே சொன்ன உதாரனத்தை வைத்தே சொல்கிறேன். ஒருவருடைய கதை மற்றொருவருடைய கதையாகலாம். ஆனால், திரைக்கதை ஒருவருக்கே சொந்தம் அல்லது ஒரு குழுவுக்கே சொந்தம். இதை யாரும் மறுக்க முடியாது.

மறுப்பவர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

4 கருத்துகள்:

Chitra சொன்னது…

ஒருவர், மற்றவரின் கதையை அபேஸ் பண்ணிட்டு, "இது என் கதைதான்," என்று கதை விட்டா, சரிதான் அப்படின்னு சொல்றீங்க..... ம்ம்ம்..... இது நல்ல கதையா இருக்கே!

thiyaa சொன்னது…

அருமை

Udayakumar Sree சொன்னது…

@Chitra

கதைக்கும் திரைக்கதைக்கும் உள்ள வேறுபாட்டினை நான் பதிவிட்டிருக்கிறேன். திரைக்கதை என்பது சம்பவங்களின் கோர்வை. கதை என்பது சாராம்சம். புரிந்ததா?

Udayakumar Sree சொன்னது…

@thiya

வருகைக்கு நன்றி.