வியாழன், 11 ஜூன், 2015

குடும்பத்தலைவிகளின் குமுறல்

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு கேஸ்கள் "குடிக்கும் கணவனின் தொல்லைகள்" என்ற குற்றச்சாட்டோடு வந்துள்ளது. இதில் ஒரு பெண் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும், மற்றொருவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறினர்.

இரண்டு பேருக்குமே சொந்த வீடு உள்ளது. சிறிய அளவில் கடனும் உள்ளது. சுமைகள் பெரிதாக இல்லாததனால் சிறிய அளவில் குடிக்க ஆரம்பித்து இப்போது குடும்ப செலவுகளுக்கு பணம் தராமல் முழுவதும் குடிக்கே செலவு செய்யும் நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மனைவிகள் இருவரும் பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைசெய்து குடும்ப செலவையும் குழந்தைகளின் பள்ளி செலவையும் செய்து வருவதாக சொன்னார்கள். இதில் ஒரு பெண் என் வீட்டில் பணி செய்கிறார்.

தமிழ்நாட்டில் மது ஒழிப்புக்கு உரத்த குரல்கள் கேட்டாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால் குடும்ப பெண்களின் பலத்த எதிர்ப்புக்கு தமிழக அரசு ஆளாகும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை: