ஞாயிறு, 21 ஜூன், 2015

காற்று - புரட்சி!

அடிமையாய் இருப்பதில் உள்ள சுகம் என்னவென்று அடிமைகளுக்கு மட்டுமே தெரியும். ஏதோ ஒரு காலகட்டத்தில் எல்லோருமே அடிமையாய் இருந்திருப்போம். சிலருக்கு அதுவே பிடித்துப்போய்விட்டது. பலருக்கு பழகிவிட்டது.
சிலருக்கு மட்டுமே புழுக்கமாக இருக்கிறது. புழுக்கமாக உணருபவர்தான் காற்றை உள்ளே கொண்டுவரவேண்டும். காற்று உள்ளே வந்தவுடன், வசதியாக சிலர்மட்டும் அடிமை வேஷம் கலைக்க வருவார்கள். சுயநலவாதிகள் என்றோ சந்தர்ப்பவாதிகள் என்றோ சமத்துபிள்ளை என்றோ எப்படியாவது பெயர்சொல்லுங்கள். அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. அதுபோன்றவர்களை தடுக்கவும் வழியில்லை.

அவர்களை மனதில் வைத்துக்கொண்டு, இந்த சுயநலவாதிகளுக்காக நம்முடைய உழைப்பு சென்றுவிடுமே என்று நினைத்து புழுக்கம் கொண்டவர்கள் காற்றை வரவைக்காமல் இருந்துவிட முடியாது.
காற்று, சுத்தமான காற்று, அதுவே இன்றைய கட்டாயத் தேவை!
புரட்சி மலரும்!

On Facebook! 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சர அறிமுக வாழ்த்துகள்...

Visit : http://blogintamil.blogspot.in/2015/06/blog-post_21.html

தனிமரம் சொன்னது…

காற்று வரட்டும் கட்டுப்பாடு இல்லாமல்! இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்...

Udayakumar Sree சொன்னது…

தனபாலன் மற்றும் தனிமரம் அவர்களுக்கு என் நன்றிகள். என் பணி மேலும் சிறக்க உங்கள் வாழ்த்துக்கள் உதவட்டும்! :)