புதன், 21 அக்டோபர், 2015

ஆயுத பூசை

கடவுள், சாமி, கோவில் இதையெல்லாம் தாண்டி தமிழனின் விழாக்களில் எனக்கு அலாதி பிரியம் உண்டு...

உணவு முறை முதல், அந்தந்த விழாக்களில் செய்யவேண்டிய சம்பத்துகள், வாழ்வின் ஒவ்வொரு காலத்திலும், வருடம் முழுக்க, பண்பாட்டை ஒட்டி, தட்பவெப்ப சூழலை ஒட்டி, உடல்நிலைகளை ஒட்டி, உறவுகளை ஒட்டி, இப்படி எல்லாத்தையும் ஓட்டிப் பார்க்க வேண்டும்...என்ற எண்ணம் என்னை மிகவும் ஈர்த்த ஒன்று!

பிரிந்தாலும் பிரிந்து இருந்தாலும், சேர்த்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கி, அதில் நினைவுகளை புகுத்தி, நெகிழ்ச்சி உண்டாக்கி, அன்பை போற்றி இருப்பான்.

திரைகடல் ஓடி சாதித்ததும் அவன்தான். கூடும் கலையும், கூட்டும் கலையும் கண்டவனும் அவன்தான்.

இன்றைய தினம் ஆயுத பூசை. வாழ்வின் ஆதாரமான பொருள், இன்பம், வீடு, இவற்றில் முதலாவதை பெற எல்லோருமே ஒரு தொழில் செய்கிறோம். எல்லாத் தொழிலிலும் ஒரு ஆயுதத்தை வைத்தே செய்வோம். பேனா முதற்கொண்டு சுத்தி, கடப்பாரை, மண்வெட்டி, ஊதுகுழல், உளி, வாகனம், கணினி, ஒலிவாங்கி (Mic), என நீண்டு கொண்டே போகும் நாம் பயன்படுத்தும் பொருட்கள்.

பொறியியல் சொல்லும் தத்துவம்... எல்லாப் பொருட்களுக்கும் ஒய்வு மற்றும் பராமரிப்பு வேண்டும்! இந்த பண்டிகையின் மூலம் "பராமரிப்பை" கட்டாயமாக்கி உள்ளார்கள்.

பராமரிப்பு அவ்வப்போது செய்யும் நபர்கள், வெறுமனே ஒய்வு கொடுத்தால் போதுமானது...

செயின்ட் கொபைன் என்கிற 'ஆடி' (கண்ணாடி) தயாரிக்கும் தொழிற்சாலையில் மண் மற்றும் சில பொருட்கள் கொண்டு அதிவெப்ப சூழலில் குழம்பாக்கி அதனை குளிர்வித்துதான் ஆடி செய்கிறார்கள். அந்த அடுப்பானது இருபது வருடத்திற்கு நிறுத்தாமல் செயல்பட வேண்டும். அதுதான் அதன் ஆயுட்காலமும் கூட.

இப்படி சில விதிவிலக்குகளும் உண்டு! எந்த விழாவாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்து செய்ய வேண்டும்! எந்திரன் படத்தில் வருவதுபோல செய்யக்கூடாது! சரிதான???


கருத்துகள் இல்லை: